திருவள்ளூர்: திருத்தணி அடுத்த புச்சிரெட்டிபள்ளி கிராமத்தின் அருகே காலி மைதானத்தில் இளைஞர்கள் காணும் பொங்கல் விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடத்தி உள்ளனர்.
அப்போது, ரோந்துப் பணியில் இருந்த திருத்தணி காவல் துறை உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ், வருவதைக் கண்டவுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அனைவரும் தப்பிச்சென்றனர்.
இதில் நான்கு இளைஞர்கள் மட்டும் சிக்கிக்கொண்டனர். திருத்தணி காவல் துறை அலுவலர், இந்த நான்கு இளைஞர்களுக்கும் கிரிக்கெட் மைதானத்தை சுத்தம் செய்யச்சொல்லி புதிய முறையில் தண்டனை வழங்கினார்.
அதன்பிறகு இளைஞர்களிடம் இருந்து வாங்கப்பட்ட கிரிக்கெட் மட்டையை மீண்டும் இளைஞர்களிடமே கொடுத்தார்.
மேலும், ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல், மீண்டும் இதுபோல் கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது, கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
இதையும் படிங்க: வடசென்னையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு