ETV Bharat / state

ஊராட்சிமன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் விசாரணை - அரிவாள் வெட்டு

கடம்பத்தூரில் பணியிலிருந்த ஊராட்சிமன்ற தலைவரை சராமரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற ஆறு பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஊராட்சிமன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு
ஊராட்சிமன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு
author img

By

Published : Oct 21, 2021, 6:08 AM IST

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சிமன்றத் தலைவராக யுவராஜ் (38) பதவியில் உள்ளார். இவர் நேற்று (அக்.21) காலை 11 மணியளவில் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தார்.

அதே அறையில் அவரது அருகே ஊராட்சி செயலாளர் வினோத் என்பவர் அமர்ந்து கணினியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலில், மூன்று பேர் மட்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள்ளே சென்று ஊராட்சிமன்ற தலைவர் யுவராஜிடம் வீட்டு வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதற்கு ஊராட்சிமன்ற தலைவர் நீங்கள் யார் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். உடனே தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலை, கழுத்து, தொடை உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

காவல் துறை விசாரணை

இதனைக் கண்டு அதிர்சியடைந்த ஊராட்சி செயலாளர் வினோத், சத்தம் போட்டு கத்தியுள்ளார். ஊராட்சிமன்றத் தலைவர் கீழே சாய்ந்ததும் அவர் இறந்து விட்டார் என்ற எண்ணத்தில் கத்தியால் வெட்டிய மூவரும் தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யுவராஜை மீட்ட அங்கிருந்தவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஊராட்சிமன்ற தலைவரை வெட்டிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.