திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம், புதுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இப்பகுதிகள் தொழிற்சாலைகள் இல்லாத பகுதி என்பதால் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வேலை, வணிகம், வியாபாரம், உயர்கல்வி, தொழிற்கல்வி என அனைத்து விதமான அத்தியாவசியத் தேவைகளுக்காக சிறிது வளர்ச்சியடைந்த பகுதிகளான ஆரணி, பெரியபாளையம் பகுதிகளையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
சேதமடைந்த தரைப்பாலம்:
மேலும், போக்குவரத்திற்காக அவர்கள் தரைப்பாலங்களை நம்பி இருந்தனர். தற்போது உருவான நிவர், புரேவி புயலின் காரணத்தால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், இவர்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இயலாமல் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
அத்யாவசியத் தேவைகளுக்கு சுமார் 35 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தரைப் பாலத்தை மேம்படுத்தி தர வேண்டும் என்பதே இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தொடர் மழை காலங்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் தங்களின் மீது தமிழ்நாடு அரசு அக்கறை காட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட்னர்.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளாக வீணாகும் மக்களின் வரிப்பணம்... புலம்பும் கரூர் மக்கள்