சிஐடியு மாநில செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகள் பின்வருமாறு:
- உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 25 மாத நிலுவைத் தொகையை அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
- ஊராட்சியில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு 11,236 ரூபாய் ஊதியமும், துப்புரவு தொழிலாளர்களுக்கு 9234 ரூபாய் ஊதியமும் வழங்கிட வேண்டும்.
- மூன்று ஆண்டுகள் பணி முடித்த துப்புரவு தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பயிற்சி அளித்து பணி நியமனம் செய்யப்பட்ட 526 தொழிலாளர்களுக்கும் உடனடியாக பணி வழங்கிட உத்தரவிட்ட வேண்டும்.
- 526 கிராம ஊராட்சியில் பணிபுரியும் உள்ளாட்சித் தொழிலாளர்களுடைய குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
பின்னர், இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: பெண் பக்தரை அறைந்த அர்ச்சகரை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம்!