ETV Bharat / state

குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்: குழாய்க்கு மாலை அணிவித்து போராட்டம்!

திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே குழாயில் குடிதண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குழாய்க்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்: குழாய்க்கு மாலை அணிவித்து போராட்டம்!
குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்: குழாய்க்கு மாலை அணிவித்து போராட்டம்!
author img

By

Published : Apr 26, 2021, 1:39 PM IST

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேவுள்ள உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சமீபகாலமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துவருகின்றனர்.

இந்நிலையில், உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்குள்பட நாச்சிகுளம் தெற்குத் தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்துவரும் நிலையில் இவர்களுக்கு குடிநீராக அம்மா பள்ளி அருகே உள்ள டேங்கிலிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது.

சமீபகாலமாக அப்பகுதியில் குடிநீர் குழாய்களில் குறைவான குடிநீர் வந்த நிலையில் கடந்த 15 நாள்களாக குடிநீர் வராததால் மக்கள் நெடுந்தூரம் சென்று குளம், ஆறுகளில் குடிநீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த அப்பகுதி கிராம பெண்கள் காலிக்குடங்களை வைத்து குடிநீர் குழாயிக்கு பூமாலை போட்டு, பத்தி கொளுத்தி, வைத்து சூடம் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.