ETV Bharat / state

இடுகாட்டை காணவில்லை... அரசு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: நகராட்சிக்கு உட்பட்ட இடுகாட்டினை தனியாருக்கு விற்றதால் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் அரசு அலுவலர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

people arguing with govt officers for graveyard issue in thiruvallur
author img

By

Published : Nov 4, 2019, 10:01 PM IST

திருவள்ளூர் நகராட்சியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது தாயார் விஜயராணி இறந்ததையடுத்து அவரது சடலத்தை அடக்கம் செய்ய ஜெயநகர் இடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். நகராட்சிக்குச் சொந்தமான இந்த இடத்தினை தனியாருக்கு விற்றதால் தற்போது இங்கு சடலத்தை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டது. விஜயராணியின் சடலத்தை இரண்டு மணி நேரமாக அடக்கம் செய்யவிடாமல் காலம் தாழ்த்தி வந்ததால், சடலத்திலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது.

அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் உரிமை கொண்டாடி வருவதால் சடலங்களை புதைக்கும் இடுகாட்டைக் காணவில்லை என காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களுடன் இறந்தவரின் உறவினர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அரசு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

இதையடுத்து, விஜயராணியின் சடலம் காவல் துறையினர், வட்டாட்சியர் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. மாற்று இடத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிவகைகளை அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: குளம் காணாமல் போன வழக்கு: அலுவலர்கள் ஆஜராக உத்தரவு!

Intro:திருவள்ளூரில் சடலத்தைக் கண்ட பொதுமக்கள் வழக்கமாக சடலங்களை புதைக்க இடுகாட்டை காணவில்லை என அதிகாரிகளுடன் வாக்குவாதம் இரண்டு மணி நேரமாக சடலத்தை வைத்துக்கொண்டு புதைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது

Body:04.11.2019

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகராட்சி உட்பட்ட ஜெயநகர் சுடுகாடு இடத்தை பட்டா போட்டு விட்டதால் இறந்துபோன பாலமுருகன் என்பவரின் தாயார் விஜயராணி 68 என்பவரின் சடலத்தைக் கொண்டு வந்து புதைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய அந்த இடத்தை தனியார் ஒருவர் தனது என்று கூறி வருகிறார். வழக்கம்போல் இறந்தவர்களை புதைக்கும் இடத்தில் சடலத்தை வாகனத்தில் கொண்டு சென்றனர் பிரச்சினைக்குரிய இடம் என்றும் ஏற்கனவே சடலங்கள் புதைக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் நகராட்சியும் தகன மேடை அமைத்து இருந்ததை தனிநபர் உரிமை கொண்டாடி வருவதுடன் அங்கிருந்த மரங்களை வெட்டி அகற்றி கற்களை பதித்து கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன வழக்கம்போல் தந்தை புதைத்த இடத்தில் தாயாரை புதைக்க வாகனத்தில் கொண்டு வந்த உறவினர்கள் காவல் துறையினர் உதவியுடன் வட்டாட்சியர் பாண்டியராஜன் டிஎஸ்பி கங்காதரன் இறுதி ஊர்வலத்தை நிறுத்தினார்கள் .

பொதுமக்கள் வழக்கமாக சடலத்தை பதற்றம் ஆன இடத்தில் சடலத்தை புதைக்க விடாமல் தடுத்தாலும் இரண்டு மணி நேரமாக சடலத்தை வைத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன. மாற்று இடத்தில் சடலத்தை அதற்கான வழிவகைகளை காவல்துறையினரும் அதிகாரிகளும் கோரியும் ஏற்க மறுத்ததால் தற்போது இறந்தவரின் சடலம் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.