திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் பட்டவராயன் கோயில் கிராமத்தில் வசிக்கும் சுமார் 40 குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கிய மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு பணியை வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மேற்பார்வையாளர் ரேகா என்பவர் கடந்த 3 மாதமாக கிராம மக்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு பணி வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரேகாவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் மிரட்டல் விடுத்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் மனமுடைந்த பொதுமக்கள், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் படிக்கட்டில் அமர்ந்தபடி வேலை வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன - மன்சுக் மாண்டவியா புகழாரம்