திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் நபர் ஒருவரும், செலவிலியர் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இதனையடுத்து கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை சீல் வைக்கும் பணியை மாவட்ட நிர்வாகத்தினர் தொடங்கியுள்ளனர்.
டெல்லி சமய மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் 30 நாள்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு வந்தவர்களில் 32 பேருக்கு கரோனா தொற்று இல்லாதவர்களை முகாம்களிலிருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் திரூவள்ளூர் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதியாக இருப்பதால் காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது மாவட்ட சுகாதாரத் துறையினரும் நிர்வாகத்தினரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிதீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஊரடங்கால் இதுவரை 7 ஆயிரத்து 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 10 ஆயிரத்தும் மேற்பட்ட வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.