ETV Bharat / state

"ஜாமீன் கிடைத்த அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்பது என்பது நிறுத்தப்பட வேண்டும்"-செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

வேலைக்கு பணம் முறைகேடு வழக்கின் அடிப்படையிலான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைத்த அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்றது குறித்து குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி,உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜி,உச்ச நீதிமன்றம் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

புதுடெல்லி: வேலைக்கு பணம் முறைகேடு வழக்கின் அடிப்படையிலான அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைத்த அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்றது குறித்து குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணம் வாங்கிக் கொண்டு வேலை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறை வழக்கில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது கருத்துக் கூறிய உச்ச நீதிமன்றம் இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும் எனக் கூறியது.

ஜாமீனில் விடுதலை ஆன செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் மீண்டும் அவர் அமைச்சராக பதவி ஏற்றார். முன்பு அவர் வகித்து வந்த மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையே அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் அளித்திருந்த வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "செப்டம்பர் 26ஆம் தேதி அளித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும்," என்று கூறியிருந்தார்.

நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்றது ஆச்சர்யம் அளிப்பதாகவும், இது சாட்சிகளின் சுதந்திர தன்மை குறித்த கவலைக்குரிய விஷயமாகும்," என்றும் கூறினர்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது"-பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புதிய தகவல்!

மேலும் இது குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "நாங்கள் ஜாமீன் வழங்கினோம். அதற்கு அடுத்த நாளே நீங்கள் (செந்தில் பாலாஜி) அமைச்சராகப் பதவி ஏற்கின்றீர்கள். இது நிறுத்தப்பட வேண்டும்,"என்று கூறினர். தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆகையால் சாட்சிகள் இப்போது அழுத்தத்துக்கு உள்ளாவார்கள் என, யார் ஒருவரும் அந்த ஒரு கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அமைச்சர் தம் மீதான வழக்கின் சாட்சிகள் மீது அவர் வகிக்கும் பதவியின் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "என்ன நடந்து கொண்டிருக்கிறது?"என்று கேட்டனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "இங்கு அடிப்படைக் கொள்கை என்னவென்றால், நீதி வேண்டும் என்பது மட்டுமல்ல, அது வெளிப்படையாக இருக்க வேண்டும்,"என்றனர். "செப்டம்பர் 26-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு மற்றவர்களுக்கும் பயனளிக்கும் ஒரு நல்ல தீர்ப்பாகும். செந்தில் பாலாஜியின் அமைச்சர் நியமனம் சாட்சிகள் மத்தியில் அச்சத்தை அல்லது அழுத்தத்தை ஏற்படுத்தியதா? என்பது குறித்த கேள்வியை ஆராய்வது என்பதில் அதிக சாத்தியம் இல்லை. இது குறித்து செந்தில் பாலாஜியின் கருத்தைப் பெற்று வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும்,"என்றனர்.

"இதில் அச்சம் என்னவென்றால் இரண்டாவது பிரதிவாதி மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இப்போது அவர் கேபினட் அமைச்சராக பதவி வகித்து வருவதால், சாட்சிகள் அவருக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்," என்று நீதிபதிகள் கூறினர். எனினும் முந்தைய ஜாமீன் உத்தரவில் தலையிடுவதில்லை என்றும் நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.