திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக்கரைகளில், பனை விதை நடும் விழா காக்கை அறக்கட்டளை, மக்கள் பாதை அமைப்பினர் சார்பில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவிகள் உதவியுடன், கரையோரங்களிலிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு, பனை விதைகள் நடப்பட்டன.
இதில் சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு, பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். பனை விதைகளை நட முன்னெடுக்கும் முயற்சி மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, காக்கை அறக்கட்டளை, மக்கள் பாதை அமைப்பினர், 1500 பனை விதைகளை கரைகளில் விதைத்தனர். பின்னர், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைத்து, 10 ஆண்டுகளில் பனைமரங்களை உருவாக்க இலக்கு கொண்டுள்ளதாகவும், இதில் அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தனர்.
இந்த நிகழ்வில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவிகள், எலைட் பள்ளி குழும தாளாளர் ஞானபிரகாசம், முதன்மை நிர்வாகி பால் செபாஸ்டின், காக்கை அறக்கட்டளை நிர்வாகி மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதையும் படிங்க : 'கோ கிரீன் தர்மபுரி' செயலியை பதிவிறக்கம் செய்தால் மரக்கன்று இலவசம்!