திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், தோமூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெற்பயிர் நடவுசெய்து, ஒரு மாத காலமாக பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கன மழையினால், இடுப்புக்கு மேல் நெற்பயிரில் தேங்கி நிற்கும் மழை நீரினால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 25 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கிய நிலையில் ரூ.7 லட்சம் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பயிர்கள் அழுகும் நிலை
எதிர்பாராமல் பெய்த கனமழையினால் இடுப்பு அளவிற்கு மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி உள்ளன.
இதனால் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்ட நெற்பயிர்கள் முற்றிலுமாக அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.