மதுரை: முந்தைய அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், "தேர்தல் மூலமாக தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு பிரபலமான நபராக பணியாற்றேன். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022ல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவ்விதமான அடிப்படையும் இல்லாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், "விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதி இளைந்திரையன் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி, "ஆறுமுகசாமி, ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.