திருவள்ளூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில், வாகனங்கள் அதி வேகத்தில் சென்று வருகின்றது. திருவள்ளூர், ஈக்காடு, திருப்பாச்சூர், மணவாளநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சிலர் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர்.
அவ்வாறு அவிழ்த்து விடும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவதால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும் நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென சாலையின் நடுவே மாடுகள் படுத்து விடுகின்றன. அப்போது, வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்ததாவது; கடந்த சில நாட்களாக கால்நடைகள் சாலைகளில் அதிகம் சுற்றித்திரிவதாக புகார் வந்த நிலையில், கால்நடை வைத்திருப்பவர்கள் தங்களது கால்நடைகளை சாலைகளில் விட வேண்டாம், அவ்வாறு சாலைகளில் விடப்படும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அதையும் மீறும் பட்சத்தில் கால்நடைகள் கோ சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஏழு நாட்களில் மாடுகளை அழைத்துச் செல்லவில்லை என்றால் ஏலம் விடப்படும் என கால்நடை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தவருக்கு அபராதம் விதித்த ரயில்வே அலுவலர்கள்!