ETV Bharat / state

இடி, மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு; ஆட்சியர் நேரில் ஆறுதல்!

திருவள்ளூர்: இடி, மின்னல் தாக்கியதில் வயலில் நடவுசெய்து கொண்டிருந்த பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்சியர்
author img

By

Published : Sep 23, 2019, 11:12 AM IST

திருவள்ளூர் அருகே உள்ள பேரத்தூர் மாந்தி கிராமத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஐயப்பன் என்பவரது வயலில் நடவு வேலை செய்துகொண்டிருந்த பேரத்தூர் காலனியைச் சேர்ந்த அன்னபூரணி நடவு நட்டுக் கொண்டிருந்தபோது இடி, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இருந்த 15 பேரில் முருகன் (35), உஷா (36) என்ற இருவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், இடி மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த கலா (38), அற்புதம் (44), நாகம்மாள் (38), சின்னப்பொண்ணு (40) ஆகிய நான்கு பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இடி, மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

இது குறித்து வெங்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களிடமும் உயிரிழந்த அன்னபூரணியின் குடும்பத்தாரிடமும் ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இடி, மின்னல் தாக்கும்போது மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருக்க வேண்டும். குடிமராமத்துப் பணிகள் அனைத்து ஏரிகளிலும் செய்யப்பட்டுள்ளதால் யாரும் நீரில் இறங்கக் கூடாது. உயிரிழந்த அன்னபூரணியின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க: மின்னல் தாக்கி பெண் பலி

Intro:திருவள்ளூர் அருகே இடி மின்னல் தாக்குதலில் வயலில் நடவு செய்து கொண்டிருந்த பெண் உடல் கருகி பலி வயல்வெளியில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் படுகாயம் அடைந்ததால் திருவள்ளூர் மாவட்ட அரசு பொது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நான்கு பேரும் இருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Body:திருவள்ளூர் அருகே இடி மின்னல் தாக்குதலில் வயலில் நடவு செய்து கொண்டிருந்த பெண் உடல் கருகி பலி வயல்வெளியில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் படுகாயம் அடைந்ததால் திருவள்ளூர் மாவட்ட அரசு பொது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நான்கு பேரும் இருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் அருகே உள்ள பேர த்தூர் மாந்தி கிராமத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஐயப்பன் என்பவரது வயலில் நடவு வேலை பார்த்த பேரத் தூர்ஆத்தூர் காலனியை சேர்ந்த அன்னபூரணி நடவு நட்டுக் கொண்டிருந்த போது இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடன் நடுவு பணியில் ஈடுபட்ட 15 பேரில் முருகன் 35 உஷா 36 என்ற இருவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அவ் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் இடி மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த கலா 38 அற்புதம் 44 நாகம்மாள் 38 சின்னப்பொண்ணு 40 ஆகிய நான்குபேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இடி மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வெங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரவால்ல பாத்துக்கலாம்பேரத் தூர் கிராமத்தில் இடி தாக்கி பெண் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவி குமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் உறவினர்களிடம் உயிரிழந்த அன்னபூரணி அவர்களின் குடும்பத்தாரிடமும் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இடி மின்னல் வரும் பொழுது மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் குடி மராமத்து பணி அனைத்து ஏரிகளிலும் செய்யப்பட்டுள்ளதால் யாரும் நீரில் இறங்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்கள் உயிரிழந்த அன்னபூரணிக்கு தகுந்த இழப்பீடு அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார்.

பேட்டி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

இடிவி செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.