திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கூட்டு சாலை சந்திப்பில் சென்னை குடிமை பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தன்ராஜ், உதவி ஆய்வாளர் ஜாபர் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை காவலர்கள் சோதனையிட்ட போது, அதில் ரெம்டெசிவிர் தடுப்பூசி இரண்டும், நினாவர் ரெம்டெசிவிர் என்ற கரோனா தடுப்பூசி ஆறும் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த தினேஷ் (23) என்பதும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த தடுப்பு மருந்துகளை கள்ள சந்தையில் ரூ. 23 ஆயிரத்திற்கு விற்பதாக தெரிந்தது. அவரிடமிருந்து கரோனா தடுப்பு மருந்துகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தினேஷை நீதிபதி முன் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: உரிய நேரத்தில் 20 ஆக்ஸிஜன் சிலிண்டர் - சென்னை காவல்துறைக்கு குவியும் பாராட்டு!