ETV Bharat / state

மாணவர் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர்.. பள்ளியில் கல்வி அதிகாரிகள் விசாரணை! - CASTE NAME IN THE STUDENT BOOK

திருப்பத்தூரில் அரசுப் பள்ளி மாணவரின் புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிட்ட சாதி பெயரை எழுதி வைத்தது தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போரட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர்
போரட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 4:00 PM IST

திருப்பத்தூர்: குனிச்சு மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் ஒருவரின் புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிட்ட சாதி பெயரை எழுதி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சு மோட்டூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி இப்பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இசை குறித்து பாடம் எடுத்தாக கூறப்படுகிறது. அப்போது, மாணவர் ஒருவரின் புத்தகத்தில், அந்த மாணவரின் குறிப்பிட்ட சாதி பெயரை எழுதியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட விசிக-வினர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து மாணவர் தனது பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், கடந்த நவ.19 ஆம் தேதி பெற்றோர்கள் ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். இதற்கு ஆசிரியர் முறையான பதில் அளிக்காமல், உங்களால் என்ன செய்ய முடியுமோ? செய்து கொள்ளுங்கள் என்று முறையற்ற பதிலை கொடுத்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இசைக்கருவியை வாசிப்பவர்கள் மோசமாக சாதியை சேர்ந்தவர்கள் எனவும் ஆசிரியர் கூறியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று - செவ்வாய்க்கிழமை (நவ.26), மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை குறிப்பிட்ட ஆசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பணி நீக்கம் செய்யம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மாணவிகளிடம் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆசிரியர் சான்றிதழ்கள் ரத்து! பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு..!

இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வட்டாட்சியர் நவநீதம் மற்றும் கந்திலி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மர்றும் விடுதலை சிறுத்தை கட்சியினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வட்டாட்சியர் நவநீதம் ஆகியோர், சம்பந்தபட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வாருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விசிக-வினர் கூறுகையில், “பள்ளி மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை குறிபிட்ட ஆசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய வன்மத்துடன் பேசிய ஆசியரை பணி நீக்கம்செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.