திருவள்ளூர்: ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வயதான மூதாட்டி பூபதி அம்மாள். இவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது கணவரும் இறந்துவிட்ட நிலையில் ஓய்வு பெற்றதால் தனக்கு கிடைத்த பணத்தை வைத்து திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் எம்ஜிஆர் நகரில் 3 சென்ட் நிலம் வாங்கி, அதில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், இவரது சகோதரியின் மகனான அரசு ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜீவ் காந்தி என்பவர், மூதாட்டியிடம் வீடு புதுப்பித்து தருவதாகவும், வீட்டையும் நிலத்தையும் வைத்து தனியார் வங்கியில் கடன் பெற்று தருவதாகவும் கூறி ஏமாற்றி அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும், மூதாட்டியின் உடைமைகள், ஆவணங்கள் அனைத்தையும் அவர் திருடிச் சென்றதாக மூதாட்டி கூறுகிறார்.
தற்போது, வீடு இல்லாமல் தனது பேத்தி வீட்டில் தங்கி வருகிறார். இதனால், தன்னை ஏமாற்றிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து, ஆவணங்களையும், வீட்டையும் மீட்டுத் தருமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடமும் கண்ணீர் மல்க அழுது புலம்பி புகார் மனுவை அளித்துள்ளார்.
அவரது புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக மூதாட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் புதையல் ... தொடரும் மோசடி அழைப்புகள்