திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு சார்பில் கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசி மற்றும் ரூ. 2000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி , புதிய அட்டைகளுக்கு மட்டும் வழஙகங்பபடும் என தகவல் பரவியது.
இந்த நிலையில், நிவாரண நிதி வாங்கும் ஆர்வத்தில், புதிய அட்டைகள் குடும்ப அட்டைகள் வாங்குவதற்காக திருவள்ளூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று(மே17) 500க்கும் அதிகமானோர் கூடினர்.
அவர்கள் முககவசம் அணியாமலும், தகுந்த இடைவெளி இல்லாமலும் ஒன்று திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் ஆய்வாளர் ரவிக்குமார், வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காலை 7 மணி முதல் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டும் தகுந்த இடைவெளியுடன் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.