திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சுமார் 25ஆயிரம் தமிழர்களும் அதேபோல் தமிழர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேரும் வாழ்ந்து வருகிறார்கள். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள வங்கிகள், மளிகை கடை, நகை கடை, உணவகங்கள் என பெரும்பாலான இடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதோ இல்லையோ ஆனால் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆதிக்கும் செலுத்தி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வு போல் சில தினங்களுக்கு முன்னர் கும்மிடிப்பூண்டியின் முக்கியப்பகுதியான பஜார் பகுதியில், வியாபாரி ஒருவரை ஐந்து வட மாநில இளைஞர்கள் ஒன்றிணைந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் நேற்று கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் அழகு நிலையத்தின் வாசலில் வைத்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அந்த அழகு நிலையத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் பெண்கள் சண்டையிடுவதை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக அந்த சண்டை காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்துள்ளார்.
பெண்கள் மோதிக்கொண்டதற்கான சரியான காரணம் குறித்து தெரியவில்லை. சிலநாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பெண்கள் சண்டையிட்டுக் கொள்ளும் இந்த வீடியோவை கண்ட பொதுமக்கள் தமிழ்நாடு அரசு, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் வசிப்பதில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வழிவிட மறுத்த அரசு பேருந்து.. துப்பாக்கியால் சுட முயன்ற CISF வீரரால் பரபரப்பு!