ETV Bharat / state

"நாங்களும் சாமி கும்பிடனும்": திருத்தணி முருகன் கோயில் மூலஸ்தானத்திற்குள் புகுந்த குரங்குகள் - etv bharat tamil

திருத்தணி முருகன் கோயிலில் மூலஸ்தானத்திற்குள் குரங்குகள் சென்றதால் செய்வதறியாமல் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவத்தால் கோயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி முருகன்
திருத்தணி முருகன்
author img

By

Published : Feb 7, 2023, 6:19 PM IST

திருத்தணி முருகன் கோயிலில் மூலஸ்தானத்திற்குள் குரங்குகள் சென்றதால் செய்வதறியாமல் பக்தர்கள் அலறியடித்து ஓடினர்

திருவள்ளூர்: முருகப்பெருமானின் பிரசித்திபெற்ற 5ஆம் படை வீடாகத் திகழ்வது, திருத்தணி சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலானது பச்சரிசி மலை, புண்ணாக்கு மலை ஆகிய 2 மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகளவு உள்ளூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கோயில் அருகில் வனப்பகுதி என்பதால், அப்பகுதியில் அதிக அளவு குரங்குகள் சுற்றித் திரிவது வழக்கம். மேலும் முருக பக்தர்கள் மலை மீது அதிக அளவு பழம் மற்றும் தேங்காய் ஆகியவற்றை குரங்குகளுக்கு வழங்கி வருவதால் இந்த பகுதியில் உள்ள குரங்குகள் அதிகளவு மலைப்பகுதியில் சுற்றி வரும். இந்நிலையில் இன்று திடீரென்று மலைக் கோயிலில் மூலவர் முருகப்பெருமான் சந்நிதி பகுதியில் 5-திற்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளே சென்றதால் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அலறயடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

மேலும் வரிசையில் வந்த பக்தர்கள் வரிசைப்பகுதியிலும் பத்துக்கு மேற்பட்ட குரங்குகள் உள்ளே நுழைந்ததால், செய்வதறியாமல் 40 நிமிடங்களுக்கு மேலாக கோயில் ஊழியர்கள் திணறிப் போயினர். மேலும் மூலஸ்தான பகுதியில் உள்ள குரங்குகளை வெளியேற்றுவதற்கு கோயில் ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் முயற்சி செய்தனர். தொடர்ந்து குரங்குகள் உள்ளே வந்ததால் மூலஸ்தானம் மற்றும் வள்ளியம்மை மற்றும் தெய்வானை சந்நிதியில் பக்தர்கள் 40 நிமிடங்களுக்கு மேலாக யாரும் தரிசனத்திற்கு உள்ளே வரவில்லை. குரங்குகளை வெளியேற்றுவதற்கு கோயில் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்தனர்.

இதையும் படிங்க: Viral Video: கையில் கத்தியுடன் கானா பாடலுக்கு ரீல்ஸ் செய்யும் சிறுவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.