திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட இரண்டாவது வார்டு கந்தப்பன் தெரு பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன. இதில், கொசு, பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவைகள் பெருக்கமடைவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் திருவள்ளூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதியை நேரில் ஆய்வு செய்த வி.ஜி.ராஜேந்திரன் குப்பைகளை அகற்றவும், கழிவுநீர்க் கால்வாய்களை சீரமைக்கவும் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானத்திற்கு உத்தரவிட்டார்
உத்தரவையடுத்து நகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் தூய்மைப் பணியாளர்கள் அப்பகுதியில் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனை சட்டப்பேரவை உறுப்பினர் நேரில் ஆய்வு செய்து பணிகளை தீவிரப்படுத்தமாறு கேட்டுக் கொண்டார்.