திருவள்ளூர் மாவட்டம் துணை மின்நிலையத்தில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தை அணைக்காமல் பிரத்யேக உடை அணிந்து ஊழியர்கள் அதனைச் சரிசெய்யும் பராமரிப்பு பணிகளை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, விவசாய நிலத்தை அழித்து மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். முறைகேடுகள் எதுவும் இல்லாமல் மின்கோபுரம் அமைக்கும் பணி முறையாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அரசு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டுமென்றால் மின் கோபுரங்கள் அமைத்துதான் ஆக வேண்டும். தமிழகத்தில் புதிய மின்திட்டங்கள் மூலம் வரும் 2024ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், சீரான மின்சாரம் வழங்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும், மின்சாரத்தை சரிசெய்யும் பணிகளில் திடிரென்று உயிரிழப்பு ஏற்பட்டால் 15 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அறுந்துவிழுந்த மின்கம்பியால் தொடரும் உயிர் சேதம்: கண்டுகொள்ளாத அரசு!