ETV Bharat / state

புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தல் - அமைச்சர் சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் தொடர்பான காணொலி

author img

By

Published : Oct 27, 2021, 9:39 AM IST

திருவள்ளூர்: புட்லுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவக் கல்லூரி கட்டுமான இடம் ஆகியவற்றில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (அக்.27) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் புதிதாக 11 இடங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இந்த இடங்களில் ஒரு மாதத்துக்கு ஒன்றிய சுகாதாரக் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மூன்று மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தலா 150 வீதம் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடர்பான காணொலி

800 மருத்துவ கல்லூரி இடங்களுக்கு சேர்க்கை?

இதே போன்று நாமக்கல், திருப்பத்தூர், ராமநாதபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளில் சிறிய அளவில் குளறுபடி இருந்ததால், 100 வீதம் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய நான்கு மாவட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட காரணமான அனைத்து குறைகளும் முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க இன்று டெல்லி செல்லவுள்ளேன். அப்போது குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்ட மாவட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் தலா 50 வீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரப்படவுள்ளது. ஆக மொத்தம் 800 இடங்கள் வீதம் இந்த ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தப்படவுள்ளது.

ஏழாவது மெகா தடுப்பூசி முகாம்

புட்லுர் துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால், கரோனா விதி முறைகளை கடைப்பிடித்து மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். மருத்துவக் கல்லூரி கட்டுமான தரத்தில் தவறு மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 69 விழுக்காடு முதல்கட்ட தடுப்பூசி, 29 விழுக்காடு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டுள்ளன. வருகின்ற சனிக்கிழமை (அக்.30) தமிழ்நாடு முழுவதும் ஏழாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது” என்றார்.

ஆய்வின் போது பால்வளத்துறை அமைச்சர் சாமு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஜி ராஜேந்திரன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தீ விபத்தில் காயமடைந்தோரை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.