திருவள்ளூர்: பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார். திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் ஆகியோர் நேற்று(ஜன.9) திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “வரும் முன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில் மூன்றாவது அலையை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒன்பது பேர் கரோனா தொற்று பாதிப்பால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் மொத்தம் 2,107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மூன்றாவது அலையை சமாளிக்க ஆக்சிஜனுடன் கூடிய 200 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 80 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Today Corono update: 12,895 பேருக்கு கரோனா தொற்று உறுதி!