ETV Bharat / state

‘திருத்தணியில் ராஜகோபுரம் விரைவில் கட்டி முடிக்கப்படும்’ - அமைச்சர் சேகர் பாபு - shekar babu inspect thiruthani murugan temple

திருத்தணி முருகன் கோயிலில் கட்டப்பட்டு வரும் ராஜகோபுரம் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சேகர் பாபு  அறநிலையத்துறை அமைச்சர்  திருத்தணி முருகன் கோயில்  ராஜகோபுரம்  thiruthani murugan temple  minister shekar babu  shekar babu inspect thiruthani murugan temple  minister shekar babu inspect thiruthani murugan temple
சேகர் பாபு
author img

By

Published : Oct 1, 2021, 10:35 AM IST

திருவள்ளூர்: முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும்‌ திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (செப்.30) ஆய்வு மேற்கொண்டார்.

கோயிலில் பக்தர்களுக்கு காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கோயிலில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு பக்தர்களுக்கு பரிமாறப்படும் உணவுகள் தரமாக இருக்கிறதா எனக் கண்டறிந்தார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

மேலும், முருகன் கோயிலில் இலவசமாக முடி காணிக்கை செலுத்தலாம் என முதலமைச்சர் அறிவித்ததையடுத்து, கட்டணமில்லா திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து கடந்த முறை ஆய்வு மேற்கொண்டபோது, கோயில் தீர்த்தக்குளத்தை சுற்றி வேலி அமைக்க‌, அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என இணை ஆணையர் பரஞ்ஜோதியிடம் கேட்டு, விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ராஜகோபுரம் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு முதலமைச்சர் திருக்கரங்களால் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

இதையும் படிங்க: இயல்பைவிட இந்தாண்டு பருவமழை அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.