சென்னையில் நேற்று மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அயப்பாக்கம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபையில் அயப்பாக்கம் ஏரி நிரம்பினால், உபரி நீர் தங்கு தடை இன்றி வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கிராம சபைக்கூட்டம் முடிந்த பின்பு கொட்டும் மழையில் அலுவலர்களுடன் அயப்பாக்கம் ஏரி, கால்வாய்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
அயப்பாக்கம் ஏரியை தூர்வாரி கூடுதலாக நீர் சேமிக்கவும், உபரி நீர் வெளியேறும் வழித்தடங்களை ஆய்வு செய்து தண்ணீர் சீராக வெளியேற நடவடிக்கை எடுக்கவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் தேங்கியுள்ள மழைநீரால் சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து - மக்கள் அவதி