ETV Bharat / state

திருவள்ளூரில் டைடல் பார்க்: 30,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

author img

By

Published : Feb 25, 2020, 12:02 PM IST

திருவள்ளூர்: பட்டாபிராமில் கட்டப்படவிருக்கும் டைடல் பார்க் பயன்பாட்டுக்கு வந்தால் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

pandiarajan
pandiarajan

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், "திருவள்ளூர் தொகுதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலிருந்து திருநின்றவூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்தப் பேருந்து நிலையம் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 100 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியிலும் இந்த அளவுக்கு பூங்காக்கள் உள்ளதாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.

தற்போது பட்டாபிராம் அருகில் டைடல் பார்க் கட்டட அடிக்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த கட்டடம் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்தால் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது ஆண்டிற்கு ஒருமுறை கல்லூரி கொண்டு வந்தார். ஆனால் அதை மிஞ்சும் விதமாக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டுக்கு 15 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து வந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் க.பாண்டியராஜன்

மார்ச் 8ஆம் தேதி திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இன்னும் பத்து மாதங்களில் இதற்கான பணி முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டில் மருத்துவக் கல்லூரி திறக்கப்படும்" என அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்கச: டெல்லி வன்முறை உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.