ETV Bharat / state

'மதச்சார்பற்ற நாடான இந்தியாவைப் பிளவுபடுத்த முடியாது'

மதச்சார்பற்ற நாடான இந்தியாவை யாரும் பிளவுபடுத்த முடியாது என்று தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் தெரிவித்துள்ளார்.

minister-avadi-sa-mu-nasarsays-the-dmk-has-come-to-power-because-of-christian-prayer
மதச்சார்பற்ற நாடான இந்தியாவை பிளவுபடுத்தமுடியாது- அமைச்சர் ஆவடி சாமு நாசர்
author img

By

Published : Aug 2, 2021, 7:06 AM IST

திருவள்ளூர்: மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி. தேவாலயத்தின் 40ஆம் ஆண்டின் ஆரம்ப விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

டாக்டர் ஜெ. செல்லதுரை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆவடி சிறுபான்மை மற்றும் அரசியல் குழுத் தலைவர் பிஷப் டாக்டர் கே. மேஷாக் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவின் முக்கிய அழைப்பாளராகப் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "இதுவரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன்கருதி பல்வேறு சீரிய திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தினர்.

மதச்சார்பற்ற நாடான இந்தியாவைப் பிளவுபடுத்த முடியாது- அமைச்சர் ஆவடி சாமு நாசர்

மேலும், சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்துவந்தனர். ஆனால் கடந்த ஏழு ஆண்டுகால பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பல்வேறு சோதனைகள், கஷ்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் விளைவு விரைவில் அந்த ஆட்சிக்கு முடிவு வரும். மதச்சார்பற்ற இந்திய நாட்டை யாராலும் பிளவுபடுத்த முடியாது" என்றார்.

இந்நிகழ்வில், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் திராவிட பக்தன், திருவள்ளூர் ஒன்றியச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையின் அறிவிப்பு வெற்று நாடகம் - பேரா.ஜவாஹிருல்லா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.