திருவள்ளூர் : தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களின் உயிர் காக்கத் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணியைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
![மெகா கரோனா தடுப்பூசி முகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-trl-02-putlur-visual-script-tn10036_19092021175717_1909f_1632054437_37.jpg)
அதன் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் தடுப்பூசிகளை ஒரே நாளில் செலுத்துவதற்கு ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்தது. இந்த உத்தரவினை ஏற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், தடுப்பூசி செலுத்துவதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
![கரோனா தடுப்பூசி முகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-trl-02-putlur-visual-script-tn10036_19092021175717_1909f_1632054437_885.jpg)
மேலும் ஒரே நாளில் 75 ஆயிரம் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கான முயற்சிக்கு உறுதுணையாகத் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாமை புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தொடர்ந்து ஆட்டோ மூலமாக தெருத்தெருவாக சென்று லோகம்மாள் கண்ணதாசன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க : கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்