ETV Bharat / state

‘அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும்’ - ஜி. ராமகிருஷ்ணன் - g ramakrishnan addressing press

திருவள்ளூர்: அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், 20 மாணவர்கள் கொண்ட அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜி ராமகிருஷ்ணன்
author img

By

Published : Oct 15, 2019, 7:33 AM IST

திருவள்ளூர் மாவட்டம் சிங்கிலிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி கடந்த 1962ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி தற்போது பாழடைந்த நிலையில் இருந்ததால், பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி கட்டடத்தைப் புதுப்பிக்க உதவுமாறு ‘அறம்செய்ய விரும்பு’ அறக்கட்டளை மூலம் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கை மூலம் 15 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. ஆனால் பள்ளி கட்டடத்தைப் புதுப்பிக்க 21 லட்சம் ரூபாய் தேவைப்பட்டதால், மீதமுள்ள தொகையை தலைமையாசிரியர் பாஸ்கர் கொடுத்து புதுப்பித்துள்ளார். இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பள்ளி கட்டடத்தை நேரில் பார்வையிட்டு தலைமை ஆசிரியரைப் பாராட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அரசுப் பள்ளிகளை அரசு பாதுகாக்க வேண்டும். 20 மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடக்கூடாது. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு சிறப்பாக நடைபெற மத்திய, மாநில அரசுகள் வகை செய்ய வேண்டும்’ என்றார்.

Intro:அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் மாணவர்கள் 20 பேர் உள்ள பள்ளிகளை மூடக் கூடாதுபூரண மதுவிலக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்த மாநில அரசு செயல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் பேட்டி

Body:அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் மாணவர்கள் 20 பேர் உள்ள பள்ளிகளை மூடக் கூடாதுபூரண மதுவிலக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்த மாநில அரசு செயல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் பேட்டி

திருவள்ளூர் மாவட்டம் சிங்கிலி குப்பம் அரசு தொடக்கப்பள்ளி கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பள்ளி கட்டிடம்பாழடைந்த உள்ளதாகவும் கடந்து 2018 ஆம் ஆண்டு முதல்
பேர் படித்து வந்த நிலையில் தற்போது 45 பேர் பேர் பள்ளியில் மொத்தமாக படித்து வருகின்றனர் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்திருந்த நிலையில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் அறம் செய விரும்பு அறக்கட்டளை
மூலம் சமூக வலைதளமான பேஸ்புக் வாட்சப் மூலம் பள்ளிக் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை வைத்திருந்தனர் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் மூலம் போதிய நிதி நன்கொடை மூலம் வசூலிக்கப்பட்டது நிலையிலும்
மொத்தமாக.21லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளதாகவும்
15 லட்ச ரூபாய் மட்டும் வசூலானதாகவும் மீதி பணத்தை தலைமை ஆசிரியரே செலவுசெய்து பள்ளி கட்டிடம் இரண்டு தொடுதிரை வகுப்பறை கழிவறை கட்டிடங்கள் கட்டியது
குறித்து தகவல் அறிந்து வந்த மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நேரில் பார்வையிட்டு தலைமை ஆசிரியரை பாராட்டினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுடன் மாணவர்கள் 20 பேர் உள்ள பள்ளிகளை மூடக் கூடாது அதை முன்மாதிரியாகக் கொண்டு சிறப்பாக நடைபெற மத்திய மாநில அரசுகள் வகை செய்ய வேண்டும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்பது ஏழைகளை ஏழைகளாகவே இருக்கும் செய்யவும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் கொள்கை அதனால்தான் பொருளாதாரக் கொள்கை இப்படிப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சி குன்றிய உள்ளதாகவும் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒருலட்சத்து.45ஆயிரம் கோடி வரி சலுகை ஏற்படுத்தியதுதான் இதற்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய
அவர்
பூரண மதுவிலக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்த மாநில அரசு அதனை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டடம் இருந்தால் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் 5 வகுப்புகளை சேர்ந்த மாணவர்களும் ஒரே அறையில் தங்கி படித்து வந்த நிலையில் தற்போது புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதால் இன்னும் ஒரு மாதத்திற்குள் புதிய வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்க தொடங்கவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய சமூக ஆர்வலர்கள் நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என வும் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பள்ளி கட்டிடத்தை கட்ட தனக்கு உதவியதாகவும்அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு 1. ஏக்கர் 62 நிலத்தினை உரியமுறையில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்கிட வேண்டும் எனவும் தலைமையாசிரியர் பாஸ்கர் தெரிவித்தார்.
ஊடகப் பிரிவில் பணிபுரிந்து தற்போது தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவரின் முயற்சியால் மாணவர்களுக்கு புதிய கட்டிடம் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.