ETV Bharat / state

போலீஸ் என்று கூறி முதியவரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது! - stole from an old man

திருவள்ளூர்: ஆர்.கே பேட்டை அருகே தான் காவல் துறையை சேர்ந்தவர் என்று கூறி, முதியவரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டார்.

Man acted as police and stole from an old man
author img

By

Published : Oct 16, 2019, 12:02 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆந்திரா - தமிழ்நாடு எல்லையிலுள்ள ராகவல்சா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சேஷையா. இவர் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி பாலசமுத்திரம் கிராமத்திலுள்ள வங்கியில், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது மனைவியுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஆர்.கே பேட்டை அருகேயுள்ள வெள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவர், தான் ஒரு காவல் துறை அலுவலர் என்று கூறியும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்யவதாகக் கூறியும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

Man acted as police and stole prisoned

இதைத் தொடர்ந்து பணத்தைப் பறிகொடுத்த சேஷய்யா, ஆர்.கே பேட்டை காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகாரளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வழிப்பறி கொள்ளைகள் தொடர்பான புகார்கள் காவல் துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் தனிப்படைக் காவல் துறையினர் சாமுவேலைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க:

தேச பாதுகாப்பே முக்கியம் - பரப்புரையில் கர்ஜித்த நரேந்திர மோடி

Intro:திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை அருகே போலீஸ் என்று கூறி முதியவரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம கொள்ளையர் கைது.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை அருகே உள்ள ஆந்திரா மாநிலம் ராகவல்சா இரண்டாம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேஷையா என்பவர் கடந்த 29.1.2019 அன்று பால சமுத்திரம் கிராமத்தில் வங்கியில் ரூபாய் 25 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது போது அவ்வழியாக வந்த ஆர்கே பேட்டை அருகே உள்ள வெள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் நான் போலீஸ் அதிகாரி என்று அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்வதாக கூறி கையில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்று விட்டார். பின்னர் பணத்தை பறிகொடுத்த சேஷய்யா ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது இவர் மீது ஏற்கனவே சுமார் 20க்கும் மேற்பட்ட இதுபோன்ற வழிப்பறிக் கொள்ளைகள் நடந்துள்ளதாக இவர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது அதன் பேரில் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.