ETV Bharat / state

அமித்ஷா கூறிய கருத்தை எதிர்கட்சிகள் தவறாக புரிந்து கொண்டனர்-மாபா பாண்டியராஜன் - ஒரே நாடு ஒரே மொழி அமித் ஷா

திருவள்ளூர்: அமித்ஷா இந்தி மொழியை திணிப்பேன் என்றோ சட்டம் போடுவேன் என்றோ தெரிவிக்கவில்லை அவரது கருத்தை எதிர்கட்சிகள் தவறுதலாக புரிந்துகொண்டு பேசுகின்றனர் என அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ma pa pandiyarajan explanation for Amit Shah statement about one nation one language
author img

By

Published : Sep 18, 2019, 12:54 PM IST

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுகூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்துகொண்டார்.நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமித்ஷா வின் கருத்துகளை எதிர்கட்சிகள் தவறுதலாக புரிந்து கொண்டு பேசுகின்றனர்.

இந்தி தினத்தில் அவர் பேசும் போது, 'இந்தியாவின் முகமாக ஒரு மொழி இருக்க முடியும் என்றால் அது இந்தியாகத்தான் இருக்கமுடியும்' என்று தெரிவித்தார். ஆனால் அவர் சட்டம் போடுவேன் என்றோ மொழியை திணிப்பேன் என்றோ கூறவில்லை. தமிழால் வளர்ந்த திமுக கட்சி ஆட்சியில் இருக்கும் போது எத்தனை அகழாய்வுகள் நடைபெற்றது.ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை கூட திமுக ஆட்சியில் சமர்ப்பிக்கவில்லை.

மாபா பாண்டியராஜன் பேட்டி

தமிழ் வளர்ச்சித்துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வசதிகளை செய்துகொடுத்துள்ளார்.இலக்கியமும்,கலைப்பண்பாடும் அதிமுக ஆட்சியில் பொற்காலத்தை கண்டுகொண்டிருக்கிறது."என்றார்.

இதையும் படிங்க: கீழடி அகழாய்விற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் பாண்டியராஜன்!

Intro:திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் சிறப்பு பேட்டி.

Body:மாபா பாண்டியராஜன் செய்தியாளரிடம் பேசுகையில் இரண்டு முறை இரட்டை இலையை மீட்டி ஒரு உன்னதமான கட்சியாக உருவெடுத்து இருக்கிறோம் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும். என்றும் மூன்று மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் . என்றென்றும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை கோலோச்சும் என முதல்வர் மிகத்தெளிவாக தெரிவித்துள்ளதாகவும். அமித்ஷாவின் கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தவறுதலாக புரிந்து கொண்டு பேசுவதாகவும் ஹிந்தி தினத்தில் ஒரு முகம் மொழியாக முடியும் என்றால் அது இந்தியாவால் தான் முடியும் என்றும் தெரிவித்ததாகவும் .அவர் சட்டம் போடுவேன் என்றும் திணிப்பும் என்றும் அவர் கூறவில்லை . தற்போது வந்துள்ள கல்விக்கொள்கையில் நல்லது எது கெட்டது எது என்று சீர்தூக்கி பார்த்து கருத்துக்களை முன்வைக்க உள்ளோம் அதற்கான கூட்டம் நடைபெற ஒரு மாதம் இருக்கிறது என்றும் இதில் கல்வி அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழால் வளர்ந்தவர்கள் திமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை அகழ்வாய்வு நடந்துள்ளது திமுக ஆட்சியில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு ரிப்போர்ட்டர் கூட சமர்ப்பிக்க அவர்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் திமுகவினர் தான் என்றும் ஒரு வருடத்தில் இந்த துறைக்கு எடப்பாடி பல்வேறு வசதிகளை செய்துள்ளார் என்றும் இந்த துறையின் பொற்காலம் தமிழர் பாரம்பரியத்தை கட்டிக் காப்போம் என கூறும் திமுகவினர் என்ன செய்தார்கள் என்றும் திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரில் அமைந்துள்ள கீழடி அகழ்வாராய்ச்சி குளம் கொடுமணல் பகுதிகளில் அறிவியல் ரீதியாக அகழ்வாய்வு நடந்து வருவதாகவும் பல ரகங்களை உருவாக்க உள்ளதாகவும் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.