திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 8 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 3,919 உள்ளாட்சிப் பதவிகளில் 2,162 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு செலுத்த வரும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கான அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 303 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,400 காவலர்களைக் கொண்டு பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலைக் கண்காணிக்க 136 கேமராக்களும், 116 சிசிடிவி கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், 56 பார்வையாளர்களைக் கொண்டு வாக்குப்பதிவு மிகவும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதாக கூறினார்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு சிறப்பான முறையிலும், அமைதியான முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாக்கு மையத்தைப் பூட்டிய அதிமுக முன்னாள் கவுன்சிலர்!