திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகை பகுதியில் வசித்து வருபவர் எழிலரசு. இவர் அதே பகுதியில் 42 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தை எழிலரசுவின் தந்தையான குப்புசாமி என்பவர் போலியான ஆவணங்கள் தயாரித்து அதனை தனது இரண்டாவது மனைவியின் மகன் நந்தகுமார் என்பவரின் பெயருக்கு மாற்றியுள்ளார்.
இதனை அறிந்த எழிலரசு ரூ.35 லட்சம் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் தனது தந்தை மோசடி செய்ததாக, திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் எழிரலசுவின் தந்தை குப்புசாமி மற்றும் அவரது இரண்டாவது மனைவியின் மகன் நந்தகுமார் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.