திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைபேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் தினேஷ் (26),குமரன் (24) ஆகிய இருவருக்கும் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அவர்களை பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின் பேரில் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
மேலும், காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.