திருவள்ளூர்: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாகப் போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 5-ம் தேதி கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது. தினமும் மூலவருக்குச் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு வைர, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த ஒரு டன் மலர்களால் சண்முகருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி நடைபெற்று மஹா தீபாராதனை செய்யப்பட்டது.
பக்தர்கள் காவடி மண்டபத்தில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.