ETV Bharat / state

பொறியாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை - வல்லூர் அனல் மின் நிலையம்

வல்லூர் அனல் மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

jewels theft from engineer house
பொறியாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
author img

By

Published : Mar 1, 2022, 9:08 PM IST

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த வல்லூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் இங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

சுரேஷ் என்ற பொறியாளர் தமது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சுரேஷ் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 92 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சாப்பாட்டு பில் கொடுக்காமல் தகராறு - உணவகத்தை சூறையாடிய மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.