திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் கா. பாண்டியராஜன், எம்எல்ஏ பரமசிவம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கா.பாண்டியராஜன், "முத்தையா முரளிதரனின் அடையாளமே தமிழ் எதிர்ப்பு அடையாளமாக உருவகப் படுத்தப்பட்டுவிட்டது. அவரும் அதுபோன்ற ஒரு நிலைப்பாடு எடுத்தார். அவரைப் போற்றி அவரை மகிமைப்படுத்தி படமே எடுக்கக் கூடாது என்பது எனது கருத்து. இதில் அரசியல் இல்லை கிரிக்கெட் சாதனை பற்றி சொல்ல விரும்பினாலும் கவனமாகப் பார்க்க வேண்டும்.
தமிழர் விரோத கருத்துக்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தால் அதை முழுமையாக எடுக்கக் கூடிய அதிகாரம் ஒரு கலைஞனுக்கு இருக்கும் என நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது அதில் நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது. பொறுப்புணர்வோடு அவர் பார்த்து எந்த நல்ல முடிவு எடுத்தாலும் அந்த கலைஞனின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: பிகாரில் அடுத்த அரசை நிர்ணயிக்கும் சக்தி மாயாவதி!