சென்னை மாநகராட்சி 11ஆவது மண்டலத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம் கங்கையம்மன் ஆலயக்குளம் ரூ.38 லட்சம் மதிப்பில் தூர்வாரப்படவுள்ளது. இதனை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் பெஞ்சமின், சென்னை மாநகராட்சியில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வீடுகளுக்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும். அதே சமயம் மாநகராட்சிகளில் மழை நீர் திட்டத்தை செயல்படுத்தாத வீடுகளுக்கு முன் எச்சரிக்கையாக நோட்டீஸ் வழங்கப்படும். முதற்கட்டமாக 11ஆவது மண்டலத்தில் 2911 நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மக்கள் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முன் வந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் சென்னை மாநகராட்சியில் குளங்கள் மட்டுமின்றி சிறு கிணறுகளையும் தூர் வாரும் பணி நடைபெற்றுவருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, நடிகர் விஜய் பேச்சு குறித்த கேள்விக்கு விஜய் எதிர்பார்க்கும்படியான ஆட்சிதான் நடைபெறுகிறது என பதிலளித்துள்ளார்.