திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி அருகே அருந்ததியர் புறத்தில் குப்பையிலிருந்து தீ பரவியதால் பத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின. தகவலறிந்து அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
அப்போது, தீ விபத்து ஏற்பட்ட வீடுகளில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்ததால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.