திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.26 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட இணைப்பு கட்டடத்தை திறக்கும் விழா இன்று நடைபெற்றது.
விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய கட்டடத்தை நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, சதீஷ்குமார் இருவரும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இக்கட்டடத்தில் மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழக்குகளுக்கும் நில அபகரிப்பு, காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகளுக்கும் தனித்தனியாக நீதிமன்றங்கள் அமையப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவாரூர் மாவட்ட குடும்பநல நீதிமன்றக் கட்டடம் திறப்பு விழா!