ஆண்டுதோறும் பருவக் காலங்களில் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவருகிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளுவர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வர தொடங்கியுள்ளனர்.
திருவள்ளூர் ஆட்சியரின் அறிவுரையின் படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "பள்ளி வளாகங்களில் உடைந்த ஓடுகள், பிளாஸ்டிக் குடுவைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் மழைநீர் தேங்காத வகையில் அடைப்புகளைச் சரிசெய்ய வேண்டும். மண்டி கிடக்கும் புதர்களை அப்புறப்படுத்துதல் வேண்டும். பள்ளி வளாகங்களில் எங்கும் நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத் துறையின் அறிவுரைகளைப் பின்பற்றி அளவுக்கேற்ப குடிநீரில் குளோரின் கலக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமர் கோயில் பூமி பூஜை நாள் - ட்விட்டரில் ராவணனை உச்சிமுகர்ந்த தமிழர்கள்!