திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகேயுள்ள காந்திநகரில் ரமேஷ் என்பவர் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் இவர் கடையைப் பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் மற்றும் கல்லாவில் இருந்த ரொக்கம் ஆகியவை மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் உடனே செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ய எடுத்த போது, கேமராவின் ஹார்டிஸ்க்கையும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் ரூ. 5லட்சம் மதிப்பிலான பொருட்கள், ரூ.70ஆயிரம் ரொக்கம், ஆகியவை மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: