திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு சுற்றுலாப் பகுதியில் அடங்கிய லைட் ஹவுஸ், கோட்டகுப்பம், தாங்கள் பெருங்குலம், கடப்பாக்கம், அறிவுவாக்கம், பழவேற்காடு ஆகிய ஆறு ஊராட்சிகளில் கருணா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் முற்றிலுமாக அரசு அதிகாரிகள் கட்டுப்பாட்டில், இப்பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்குள்ள லைட் ஹவுஸ் ஊராட்சியில் ஒருவருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக, சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் இப்பகுதியில், அதிகாரிகள் இரவு பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆறு ஊராட்சிகளின் தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி உதவியாளர்கள் அடங்கிய அவசரக்கூட்டம், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் பழவேற்காட்டில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஊராட்சிகளும் தனிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்தும், ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைப்பிடிப்பது குறித்தும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு பொன்னேரி காவல் துறை ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 38 பேருக்கு கரோனா; எண்ணிக்கை 1242ஆக உயர்வு!