திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரளா வயது 60. இவர், 30 வெள்ளாடுகளை வளர்த்துவருகின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆடுகளை மேய்த்துவிட்டு, தனது வீட்டின் அருகே இருந்த ஆட்டு கொட்டாயில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார்.
பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது ஆட்டு கொட்டாயில், நாய்கள் புகுந்து 15 வெள்ளாடுகளை கடித்து குதறியுள்ளது. இதில், 15 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. மேலும், ஒன்பது ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட சரளா அதிர்ச்சியடைந்தார்.
பின்பு இதுகுறித்து, திருத்தணி கால்நடை உதவி இயக்குனருக்கு தகவல் கொடுத்தனர். உதவி இயக்குனர் தாமோதரன் தலைமையில் மருத்துவர்கள் விரைந்து சென்று காயமடைந்த ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு சிகிச்சையளிதுள்ளனர். பின்னர், பலியான ஆடுகளின் மதிப்பு ரூ75 ஆயிரம் ஆகும். எனவே மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.