ETV Bharat / state

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கருட சேவை விழா - கருட சேவை விழா

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தை பிரமோற்சவ விழா மூன்றாம் நாளான இன்று காலை கருட சேவை விழா நடைபெற்றது.

Garuda service ceremony at trl Veeraragava Perumal Temple
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில்
author img

By

Published : Jan 23, 2020, 11:34 PM IST

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக வைணவர்களால் போற்றப்படும் திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில், தை மாத பிரமோற்சவ விழா நடந்துவருகிறது. மூன்றாம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு முழுக்கும், அலங்காரம் மற்றும் வழிபாடும் நடந்தது.

தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீரராகவ பெருமாள் காலை 9 மணிக்கு, கருட வாகனத்தில் உற்சவர் விஜயராகவ பெருமாள் எழுந்தருளி, வீதியுலா வந்து அருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வீரராகவ பெருமாள் கோயில் கருடச் சேவை விழா

நான்காம் நாளான நாளை காலை சேஷ வாகனத்திலும், மாலை சந்திர பிரபையிலும் உற்சவர் வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

ஏழாம் நாளான, 27 ஆம் தேதி காலை தேர் திருவிழாவும், 29 ஆம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, வீரராகவ சுவாமி கோயில் தேவஸ்தான ஊழியர்கள் செய்துவருகின்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : குடியரசு தினம்: ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

Intro:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில்
கருட சேவை விழா:

Body:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில்
கருட சேவை விழா:

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தை பிரமோற்சவ விழா மூன்றாம் நாளான இன்று காலை கருட சேவை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று காலை 5 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோபுர தரிசனமும், தொடர்ந்து கருட வாகனத்தில் உற்சவர் வீதியுலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.