ETV Bharat / state

ஆடி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணமில்லா பணம் பறிமுதல் - Thiruvallur latest

திருவள்ளூர்: உரிய ஆவணங்கள் இன்றி ஆடி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 21ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Flying squad seizes undocumented cash in Audi car near Thiruvallur, Thiruvallur Flying squad, undocumented cash seized in Audi car near Thiruvallur, திருவள்ளூர் தேர்தல் பறக்கும் படை, திருவள்ளூர் பறக்கும் படை, திருவள்ளூர், Thiruvallur, Thiruvallur latest, திருவள்ளூர் மாவட்டச்செய்திகள்
flying-squad-seizes-undocumented-cash-in-audi-car-near-thiruvallur
author img

By

Published : Mar 10, 2021, 7:20 AM IST

தமிழ்நாட்டில் பதினாறாவது சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டம் சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கத்தூர் பகுதியில் பறக்கும் படைத் தலைவர் உதயசந்திரன் தலைமையில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் டேனியல் சுரேஷ் உள்ளிட்ட காவலர்கள் வேகமாக வந்த ஆடி காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணங்கள் அற்ற ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்தை காரில் இருந்த பையிலிருந்து பறிமுதல் செய்தனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து பறக்கும் படையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டியில் ஒரேநாளில் சிக்கிய ஏழு லட்சம் ரூபாய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.