கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தவித்துவருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதமாக கிராம மீனவர்கள் நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை கடலிற்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் , மத்திய அரசு நேற்று மீனவர்கள் கடலிற்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பழவேற்காடு மீனவர்கள், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினாலும், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாகவும் நாளை மறுநாள்வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என கூறியுள்ளனர்.
மேலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கடலில் மீன்பிடிக்க அனுமதி கொடுங்கள் - முதலமைச்சருக்கு வேண்டுகோள்!