ETV Bharat / state

பூண்டி ஏரியில் மீனவர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்!

பூண்டி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மாயமானதையடுத்து அவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டவருகின்றனர்.

பூண்டி ஏரி
பூண்டி ஏரி
author img

By

Published : Jan 22, 2022, 8:00 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் கொழுந்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்(30). இவருக்கு எஸ்தர் என்ற மனைவியும், குகன்(7) என்ற மகன், சுப்ரியா(5) என்ற மகளும் உள்ளனர்.

மீன் பிடிக்கும் தொழில் செய்துவரும் விஜயன், வழக்கம் போல் இன்று(ஜன.22) காலை 6 மணி அளவில் பூண்டி ஏரியில் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

எப்பொழுதும் காலை 9 மணியளவில் வீடு திரும்பும் விஜயன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், மதியம் 12 மணி அளவில் விஜயனின் மனைவி எஸ்தர், உறவினர்கள் பூண்டி ஏரிக்கு சென்று பார்த்தபோது படகு மட்டும் இருந்துள்ளது.

விஜயன் மாயமானதைக் அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் புல்லரம்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தீயணைப்பு துறையினர் ஐந்திற்க்கும் மேற்பட்டோர் மாயமான விஜயனை பூண்டி ஏரியில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் குறைந்து வரும் கரோனா பரவல் விகிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.