ETV Bharat / state

தண்ணீரில் மூழ்கிய மீனவர்; வலையில் சிக்கி உயிரிழப்பு - Fisherman died after drown into lake

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் சிக்கி உயிரிழந்தார்.

மீனவர்
மீனவர்
author img

By

Published : Jan 12, 2021, 8:23 AM IST

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே அவுரிவாக்கம் கீழ்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் சிகாமணி (54). பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதற்காக சீராளன், ராஜேஷ் ஆகியோருடன் சேர்ந்து அவர் சென்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி வலையில் சிக்கிமாட்டிக் கொண்டார். உடனிருந்த மீனவர்கள் அவரை வலையிலிருந்து மீட்பதற்குள் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து திருப்பாலைவனம் காவல் துறையினருக்கும், வருவாய் மற்றும் மீன்வளத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், திருப்பாலைவனம் காவல் துறையினர், வருவாய் மற்றும் மீன்வளத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அவுரிவாக்கம் ஊராட்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.